Sunday, December 11, 2011

பாரதி

ஒற்றுமையென்றால் என்னென்றறியாத காலத்தே
வேற்றுமையழிக்க சினம் முழங்கிய வீரனே!

உயிர்க் காற்றை சிறிதே சுவாசித்தாலும்,
தமிழ்மூச்சென் உயிர்மூச்சென வாழ்ந்த கவிஞனே!

இன்றைய நிலையென்ன அறிவாயோ?

கால்கீழ் மிதித்திடும் கொடியோ,
அது தாயின் மணிக்கொடி பாரீர் !
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம், அதை
உயர்த்தி தலைஉடை வாரீர் !!
வெள்ளை நிறமொறு பூனை,
அது நாட்டை கெடுத்திடும் பாரீர் !
சாம்பல் நிறமொறு பூனை,
அது வீட்டை கெடுத்திடும் பாரீர் !!

செந்தமிழ் நாடெனும் போதினிலே, கட்சி
கழகமும் கலகமும் காதினிலே ..
எங்கள் பிந்தையர் நாடெனும் போதினிலே,
இரத்த கண்ணீர் பிறக்குது கண்களிலே ..

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ..
உச்சிமீது காசுவாங்கி வீடுகட்டும் போதினும்,
இச்சையின்றி கொச்சையாக கப்பம்கட்டும் போதினும்,
துச்சமாக எண்ணி மண்ணின் தலையெடுத்த போதினும்,
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ..
அரசினோடு சரசமிட்டால் அச்சமென்பதில்லையே!!

ஓ பாரதியே!

சுயாட்சிக்கு முன்,
கை நீட்டி குற்றம் சொல்ல வெள்ளையனிருந்தான்.
சுயாட்சிக்கு பின்,
எந்த கொள்ளையனையெதிர்த்து யாம் கவிதை செய்வது?

எம்மால் முடியாது பாரும்,
நீரே மறுபடி வாரும்,
மண்ணின் கோலத்தைக் காணும்,
மீசை துடித்திட பாடும்!!

Happy Birthday
- Sravan.